2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

தென் சூடானில் போரிலீடுபட்ட தரப்புகள் யுத்தநிறுத்த பிரகடனம்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 12 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் சூடானில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு தலைப்பட்சமான யுத்தநிறுத்தம் மற்றும் போர் நடவடிக்கைகளை நிறுத்துவதாக தென் சூடான் ஜனாதிபதி சல்வா கிர் பிரகடனம் செய்துள்ளதுடன், உப ஜனாதிபதி ரிக் மச்சாருக்கு விசுவாசமான எதிரணிப் படைகளும் மோதலில் ஈடுபடுவதிலிருந்து விலகியிருக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பேச்சாளர் அட்டெனி வெக் அட்டெனியால் மேற்குறித்த உத்தரவு திங்கட்கிழமை (11) அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான உடனடியான பதிலீர்ப்பாக, தனது துருப்புக்களை, மோதலில் ஈடுபடுவதை நிறுத்துமாறு இலங்கை நேரப்படி திங்கட்கிழமை இரவு 10.30க்கு மச்சார் அறிவித்திருந்தார்.

சமாதான ஒப்பந்தத்தில் எஞ்சியிருப்பதை காப்பாற்றும் முயற்சியாக, மச்சாருடன் ஜனாதிபதி உரையாடியதாகவும், அவரவர் படைகளைக் கட்டுப்படுத்துவது பற்றி அவர்கள் கதைத்ததாகவும் அட்டெனி தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (07) ஆரம்பித்த மோதல்களில், கடந்த திங்கட்கிழமையே (11) பயங்கரமான சில மோதல்கள் இடம்பெற்றிருந்தன. தென் சூடான் மீது உடனடியான ஆயுதத்தடையை விதிக்குமாறு, பாதுகாப்புச் சபையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் கோரியிருந்த நிலையிலேயே யுத்தநிறுத்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

மேற்குறித்த அண்மைய வன்முறைகளில், குறைந்தது 272 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சின் தகவல் மூலமொன்று ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவித்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .