2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

நைஜீரிய ஜனாதிபதி காலமானார்

Super User   / 2010 மே 06 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரிய ஜனாதிபதி உமறு யார் அடுவா தனது 58ஆவது வயதில்  காலமாகியுள்ளார்.

இவர்  நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலேயே நேற்றுக் காலமானதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இவரது மறைவை முன்னிட்டு, நைஜீரியாவில் ஏழு நாள்கள்  துக்கதினத்தை அனுஷ்டிக்குமாறு நைஜீரிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இவரது இறுதிச் சடங்குகள் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவிருக்கிறது.

உமறு யார் அடுவா 2007ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பதில் ஜனாதிபதியாகக் கடமையாற்றி வரும் துணை ஜனாதிபதி குட்லக் ஜொனதன் விரைவில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--