Freelancer / 2026 ஏப்ரல் 25 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் நேற்று நடந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காகவே பெல்ஜியத்திலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து நேற்று காலை திருவான்மியூரில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார் அஜித்.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் அஜித் தனது வாக்குச்சாவடிக்கு 6.45 மணிக்கே வந்துவிட்டார்..
அஜித் வந்துவிட்டதால் தேர்தல் அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனுமதித்துவிட்டனர். 6:55 மணிக்கு அஜித் வாக்களித்து விட்டார். இதனால்தான் நேற்று பல தொலைக்காட்சிகளும் ‘தமிழ்நாட்டில் முதல் ஆளாக வாக்களித்த அஜித்’ என தொடர்ந்து செய்தி ஒளிபரப்பு வந்தார்கள்.
ஆனால் இது தேர்தல் விதிமீறல் என புகார் ழுந்திருக்கிறது. ஏனெனில் தேர்தல் ஆணைய விதிப்படி காலை 7 மணிக்குதான் வாக்குப்பதிவு துவங்க வேண்டும். அஜித்துக்காக 5 நிமிடங்கள் முன்பே எப்படி அவரை வாக்களிக்க அனுமதித்தார்கள் என்பது தெரியவில்லை.
அடுத்து, வாக்களித்த எல்லோருக்கும் இடது கை ஆள்காட்டி விரலில்தான் மை இட்டார்கள். ஆனால் அஜித்துக்கு வலது கை விரலில் மையிட்டார்கள். அந்த விரலை அவர் செய்தியாளர்களிடமும் காட்டி போஸ் கொடுத்தார். இதுவும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. R
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago