Shanmugan Murugavel / 2015 நவம்பர் 19 , மு.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு நைஜீரிய நகரான கனோவில் உள்ள நெருக்கடி மிகுந்த அலைபேசிச் சந்தையொன்றில் நிகழ்ந்த இரண்டு சக்திவாய்ந்த குண்டுவெடிப்புக்களில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நைஜீரியாவின் வடகிழக்கு நகரான யொலாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் முப்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட மறுதினமே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஒன்று சந்தைக்குள் வைத்தும் மற்றையது சந்தையின் வாயிலில் வைத்தும் இரண்டு பெண் தற்கொலை குண்டுதாரிகளால் வெடிக்க வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தவிர, இந்த இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 53 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்துக்கு ஆறு பேர் வாகனத்தில் வந்திருந்ததாகவும் இரண்டு பேர் மட்டுமே வாகனத்திலிருந்து வெளியே வந்ததாகவும் ஏனைய நான்கு பேரும், குண்டுவெடிப்புக்கு முன்னர் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் சம்பவநேரத்தில் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கும் இதுவரையில் எவரும் உரிமை கோராத நிலையில், கனோ பிரதேசத்தில் முன்னர் தாக்குதல்களை நடாத்திய இஸ்லாமிய போகோ ஹராம் இயக்கமே இந்தத் தாக்குதலையும் நடாத்தியிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
கனோ, யொலாவில் இடம்பெற்ற தாக்குதல்களை காட்டுமிராண்டித்தனமாவை என நைஜீரியா ஜனாதிபதி முஹமட் புகாரி வர்ணித்துள்ளார்.
33 minute ago
46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
46 minute ago
3 hours ago