2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நைஜீரியா சந்தைக் குண்டுவெடிப்பில் பலர் பலி

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 18 , மு.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகிழக்கு நைஜீரிய நகரான யோலாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டும் மேலும் பலர் காயமடைந்தும் உள்ளதாக செஞ்சிலுவைச் சங்கமும் தேசிய அவசரகால முகாமைத்துவ முகவரகமும் தெரிவித்துள்ளது.

அடமாவா மாநிலத் தலைநகரின் ஜிமெட்டா பகுதியில் உள்ள பிரதான வீதிக்கு அருகிலிலுள்ள மரக்கறி, பழச் சந்தையிலேயே மேற்படி குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. தவிர, இந்தப் பகுதி கால்நடைச் சந்தை என்பதால், கொள்முதல் செய்பவர்களால் இந்தப் பகுதி நெரிசலாக இருந்திருந்தது.

தாக்குதலை யார் மேற்கொண்டார்கள் என்று உடனடியா உரிமை கோரப்படாது விட்டாலும், வடகிழக்கு நைஜீரியாப் பகுதியில் இஸ்லாமியச் சட்டத்தை அமுல்படுத்தி, தனியொரு நாடாக அப்பிரதேசத்தை மாற்ற விரும்பும் போகோ ஹராம் ஆயுததாரிகளின் மீதே அதிகாரிகளின் கை நீளும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில், இந்த யோலா பிரதேசத்தில், தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையும் வேறு குண்டு வெடிப்புக்களையும் போகோ ஹராம் இயக்கம், முன்னர் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு நைஜீரியாவில், வெவ்வேறு நகரங்களில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் தற்கொலைதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் இடம்பெற்று ஒரு மாதத்திற்குள்ளேயே மேற்படித் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .