Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2016 மே 18 , மு.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈராக் தலைநகர் பக்தாத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட மூன்று தாக்குதல்களில் உயரிழந்தோரின் எண்ணிக்கை, 77ஆக அதிகரித்துள்ளது. மேலதிகமாக, 140 பேர் இத்தாக்குதல்களில் காயமடைந்துள்ளனர்.
ஈராக் தலைநகரில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள தாக்குதல்களின் ஓர் அங்கமாக இடம்பெற்ற இத்தாக்குதல்கள், அங்கு நிலவும் பாதுகாப்பற்ற நிலைமையை வெளிக்காட்டுபவனாக அமைந்துள்ளன.
அல்-ஷாப் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், 41 பேர் கொல்லப்பட்டதோடு, 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்த நிலையில், அந்தத் தாக்குதலுக்கும், அருகிலுள்ள நகரான சாடர் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டு, 57 பேர் காயமடைந்த தாக்குதலுக்கும் பொறுப்பேற்பதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு அறிவித்துள்ளது.
மூன்றாவது தாக்குதல், அல்-றஷூட் பகுதியில், கார்க் குண்டுத் தாக்குதலாக அமைந்தது. அந்தத் தாக்குதலில், ஆறு பேர் கொல்லப்பட்டு, 21 பேர் காயமடைந்திருந்தனர். இந்தத் தாக்குதலுக்கு, இதுவரை எவரும் உரிமை கோரியிருக்கவில்லை.
தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பகுதிகள், ஷியா முஸ்லிம்கள் வாழும் பகுதியென்பதால், அப்பிரிவு மக்களிடையே, அச்சமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
19 minute ago
54 minute ago
2 hours ago