Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூன் 06 , பி.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒர்லாண்டோ நகரத்துக்கு அருகிலுள்ள படங்குத் தயாரிப்பு தொழிற்சாலையொன்றில், தனது வேலையிலிருந்து, இவ்வாண்டு ஏப்ரலில் நீக்கப்பட்ட நபரொருவர், தனது பணியிடத்துக்கு நேற்றுத் திரும்பி, தன்னைத்தானே கொல்வதற்கு முன்னர், தான் இலக்கு வைத்த ஐந்து பேரைச் சுட்டுக் கொன்றதாக, ஒரேஞ் கவுண்டி ஷெரிப்பான ஜெர்ரி டெமிங்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்க இராணுவத்தில் முன்னர் பணிபுரிந்த, 45 வயதான ஜோன் றொபேர்ட் நியூமன், வாகனங்களுக்கான படங்குகளைத் தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர் என தம்மை அழைத்துக் கொள்ளும் பியம்மா எனும் அழைக்கப்படும் வர்த்தகத்துக்குள், அரைத் தானியக்க கைத்துப்பாக்கி ஒன்றுடனும், வேட்டைக் கத்தியொன்றுடனும் நுழைந்தே, மேற்கூறப்பட்ட கொலைகளை நடாத்தியுள்ளார்.
அதிருப்தியடைந்த முன்னாள் பணியாளரொருவர் என நியூமன்னை, டெமிங்ஸ் விவரித்தபோதும், ஏன் நியூமன் பணியிலிருந்து நீக்கப்பட்டார் என்றும், என்ன காரணத்தினால், மேற்படி நடவடிக்கைகளை நியூமன் புரிந்தார் எனவும் தெளிவில்லாமல் உள்ளதாகக் கூறியுள்ளார். இந்நிலையில், எந்த ஆயுததாரிகள் அமைப்புடனும் நியூமன் தொடர்புபட்டிருக்கவில்லை என, டெமிங்ஸ் தெரிவித்துல்ளார்.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோனோர், தலையில் சுடப்பட்டதாகவும், சிலர் பல தடவைகள் சுடப்பட்டுள்ளதாகவும் கூறிய டெமிங்ஸ், தான் சுட்ட தனிநபர்களை, நிச்சயமாக நியூமன் இலக்கு வைத்ததாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், நியூமன், முகாமையாளர்களை இலக்கு வைத்தது போல் தோன்றியதாக, பியம்மாவுக்கு அயலிலுள்ள வர்த்தகமொன்றின் உரிமையாளரான டொட் புளூவோட்டர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நியூமன் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டபோது, அங்கு இருந்த வேறு எட்டுப் பேர் காயமடைந்திருக்கவில்லை.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago