2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

‘பதவிக் காலம் முடிவடைந்ததும் ஜெம்மா பதவி விலக வேண்டும்’

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

காம்பியா ஜனாதிபதி யாஹியா ஜெம்மா தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவு பெற்றவுடன் நாட்டின் ஜனாதிபதியாகத் தொடருவதற்கு அவர் அனுமதிக்கப்படமாட்டார் என்றும், பதவியிலிருந்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்வார் என்றும் மேற்கு ஆபிரிக்காவிலுள்ள ஐக்கிய நாடுகளின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

1994ஆம் ஆண்டு இடம்பெற்ற பதவிக் கவிழ்ப்பொன்றின் மூலம் ஆட்சிக்கு வந்த ஜெம்மா, இம்மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற தேர்தலில் தனது போட்டியாளரான அடமா பரோவிடம் தோல்வியடைந்தமையை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில், பரந்தளவிலான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்ற ஜெம்மாவின் 22 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்த வெள்ளிக்கிழமை (09) குத்துக்கரணமடித்த ஜெம்மா, தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அறிவித்திருந்தார். இதனையடுத்து, சர்வதேச ரீதியாக எதிர்ப்பை எதிர்கொண்டிருந்தார். இது தவிர, தேர்தல் முடிவினை காம்பியாவின் உச்ச நீதிமன்றத்தில் ஜெம்மாவின் கட்சி சவாலுக்குட்படுத்தியுள்ளது.

இந்நிலைலேயே, கருத்துத் தெரிவித்த, மேற்கு ஆபிரிக்கா மற்றும் சஹேலுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநீதியான மொஹமட் இப்ன் சேம்பஸ், ஜெம்மாவுக்கான முடிவு இங்கிருக்கிறது. எந்தவொரு நிலமைகளிலும் ஜனாதிபதியாகத் தொடர முடியாது. அவரது ஆணையின் முடிவில், பரோவிடம் அவர் கையளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

பதவி விலகி, பரோவிடம் அதிகாரத்தை பரோவிடம் கையளிக்காவிட்டால், கடுமையான பொருளாதாரத் தடைகளை ஜெம்மா எதிர்கொள்வார் எனத் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .