2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

போபால் விஷ வாயு வழக்கு; 8 பேர் குற்றவாளிகளென தீர்ப்பளிப்பு

Super User   / 2010 ஜூன் 07 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

போபால் விஷவாயு வழக்குத் தொடர்பில்  8 பேர் குற்றவாளிகள் என போபால் முதன்மை நீதிமன்றம் இன்று  தீர்ப்பளித்துள்ளது.

1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் 3ஆம்  திகதிகளில் போபாலிலுள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய மெதையின் ஐசோசயனேட் விஷவாயு கசிந்ததன் காரணமாக 15,000 பேர்  உயிரிழந்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு  கடந்த 26 ஆண்டுகளாக இழுபறியில் இருந்து வந்திருந்த நிலையில்,பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமும் கிடைக்கவில்லை

இந்நிலையில், இந்தவழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மோகன் திவாரி, 85 வயதாகும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான மகிந்திரா மற்றும் 7 பேர் குற்றவாளிகள் என தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

அலட்சியப் போக்கால் மரணம் விளைவித்தல், கொலை அல்லாத மரணத்திற்குக் காரணமாக அமைந்தது, ஒட்டுமொத்த கவனக்குறைவு ஆகிய பிரிவுகளின் கீழ் 8 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--