2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

பிரேஸிலில் கடும் மழை; 100 பேர் உயிரிழப்பு

Super User   / 2010 ஏப்ரல் 07 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸில் ரியோ டி ஜெனேரியோ மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, பிரேஸிலில்   அவசரகால நிலைமையை அந்த நாட்டு அரசாங்கம் உடனடியாக பிரகடனப்படுத்தியுள்ளது.

அத்துடன், பிரேஸிலில் பெய்து வரும் கடும் மழை மற்றும் மண்சரிவு காரணமாக பலர் காணாமல் போயிருக்கும் அதேவேளை,  மண்சரிவுகளில்   பல வீடுகள் புதையுண்டு போயுள்ளன.

மண்சரிவுகளில் புதையுண்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பிரேஸிலில் மழை வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .