Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 16 , பி.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீநகர், ரம்பன் மாவட்டத்தில் வைத்து, அமர்நாத் யாத்திரிகர்கள் சென்ற பஸ், 150 அடி பள்ளத்தில் வீழ்ந்தமையால், 16 பேர் உயிரிழந்துள்ளனரெனவும் 27 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும், ஜம்மு- காஷ்மிர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜம்முவிலிருந்து காஷ்மிருக்கு, இன்ற (16) சென்றுக்கொண்டிருந்த பஸ், நெடுஞ்சாலையூடாக பயணிக்கும் போதே, விபத்துக்குள்ளாகியுள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து, புரண்ட பஸ், சுமார் 150 அடி ஆழத்திலுள்ள பள்ளத்தாக்குப் பகுதியொன்றுக்குள் வந்து விழுந்துள்ளது.
சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களும் படுகாயமடைந்தவர்களும், ஹெலிகொப்டர்கள் மூலமே வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே, குறித்த பகுதியிலுள்ள பிரதேசவாசிகள், மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டதாகவும் பின்னர், பொலிஸாரும் இராணுவத்தினரும் மீட்பு நடவடிக்கைகளில் இணைந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
சாரதியால், பஸ்ஸின் வேகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனதாலேயே, இந்த விபத்துச் சம்பவித்துள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு-காஷ்மிர் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் கவலைத் தெரிவித்துள்ளனர்.
“அமர்நாத் யாத்திரிகள், பஸ் விபத்தின் மூலம் உயிரிழந்துள்ளமை வருத்தமளிக்கின்றது. அவர்களது குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று, பிரதமர் மோடி, தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
14 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
26 minute ago