2021 மார்ச் 01, திங்கட்கிழமை

போடெங் தொடர்பாக தெரிவித்த கருத்து: மன்னிப்புக் கோரியது கட்சி

Shanmugan Murugavel   / 2016 மே 30 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்பந்தாட்ட வீரரான போடெங் தொடர்பாக காலன்ட் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், தனது கருத்துக் குறித்து அவர் விளக்கமளித்ததோடு, அவரது கட்சி மன்னிப்புக் கோரியுள்ளது.

தனக்கு அவரைத் தெரியாது எனவும், அவரது ஆளுமையைத் தரக்குறைவாகப் பேசும் எண்ணத்தில் தான் வரமாட்டார் எனவும் தெரிவித்த காலன்ட், மக்களில் சிலர் எவ்வாறு நினைக்கிறார்கள் என மட்டுமே குறிப்பிட்டதாகவும், தனது கருத்து அதுவன்று எனவும் குறிப்பிட்டார்.

ஆனால், அவரது கட்சியின் தலைவி ப்றாகே பெட்ரி, காலன்ட் சார்பாக மன்னிப்புக் கோரினார். அத்தோடு, 'ஜெரோம் போடெங், சிறந்ததொரு கால்பந்தாதட்ட வீரர், அத்தோடு ஜேர்மனி தேசிய அணியில், சரியான முறையில் ஓர் அங்கமாக உள்ளார். ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டிகளை எதிர்பார்த்துள்ளேன். #அயலவர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .