Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 ஜூலை 27 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டிலும் சரி அமெரிக்காவில் பொதுவாகவும் சரி, ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் தெரிவாகின்றமை குறித்து எதிர்பார்ப்புகள் காணப்பட்டாலும், அவருக்கான எதிர்ப்புகளும் தொடர்ந்து காணப்படுகின்றன.
இந்நிலையில், தேசிய மாநாட்டின் இரண்டாவது நாளில் உரையாற்றிய ஹிலாரி கிளின்டனின் கணவரும் முன்னாள் ஜனாதிபதியும் மிகச்சிறந்த பேச்சாளராகக் கருதப்படுபவருமான பில் கிளின்டன், ஹிலாரியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கவனத்தை ஏற்படுத்தி, நேர்முகமான எண்ணங்களை ஏற்படுத்த முயன்றார். அதற்காக அவர், கதை சொல்லல் வடிவில் தனது உரையின் பெரும்பகுதியை மேற்கொண்டார்.
"1971ஆம் ஆண்டின் இளவேனில் காலத்தில், பெண்ணொருத்தியை நான் சந்தித்தேன்" என ஆரம்பித்த பில் கிளின்டன், அவர்களுடைய காதலின் ஆரம்பம் தொடக்கம், திருமணத்துக்காக ஹிலாரியைச் சம்மதிக்க வைத்தமை ஆகியன தொடர்பாக உரையாற்றினார். தொடர்ந்து, ஹிலாரியின் திறமை, பலம், சளைக்காத இயல்பு ஆகியவற்றின் மீது பிரமிப்பு அடைந்தமையைப் பற்றித் தெரிவித்தார்.
தொடர்ந்து, கொள்கைகள் பற்றி உரையாற்றிய அவர், ஹிலாரியின் போட்டியாளரான டொனால்ட் ட்ரம்ப்பின் கொள்கைகளை விமர்சித்தார். குறிப்பாக, அமெரிக்காவுக்குள் வருவதற்கு முஸ்லிம்களுக்குத் தடை விதிப்பது பற்றிய அவரின் கருத்தை விமர்சித்தார். எனினும், ட்ரம்ப்பின் பெயரைக் குறிப்பிடாமலேயே இந்த விமர்சனங்களை முன்வைத்தார்.
"நீங்கள் முஸ்லிமாக இருந்து, அமெரிக்காவையும் சுதந்திரத்தையும் விரும்பி, பயங்கரவாதத்தை வெறுப்பீர்களானால், இங்கேயே இருந்து, நாங்கள் வெற்றிபெற உதவுங்கள். அத்தோடு, எதிர்காலமொன்றைச் சேர்ந்து உருவாக்குங்கள்" என்றார்.
33 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
51 minute ago