2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

மைக்கேல் ஜாக்ஸனின் மகனுக்கும் சரும நோய்?

Super User   / 2010 ஜூலை 02 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகப் புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜக்ஸன் பாதிக்கப்பட்டிருந்த சரும நோய், தற்போது அவரது மகனுக்கும் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

பாப் இசை உலகில் புகழ் பெற்று விளங்கிய மைக்கேல் ஜக்ஸன் கடந்த ஆண்டு உயிரிழந்தார். அவருக்கு "விட்டிலிகோ" எனப்படும் சரும நோய் இருந்தது எனவும், அதன் காரணமாகவே அவரது உடலின் நிறம் பொலிவு பெற்று வந்தது எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ஜாக்ஸனின் 13 வயதான மகன் பிரின்ஸ் மைக்கெலுக்கும் இதே போன்ற நோய் இருப்பது தெரியவந்துள்ளது. ஹவாய் தீவில் தனது சகோதரர் பிளாங்கெட் (வயது 8) மற்றும் சகோதரி பாரிஸ் (வயது 12) ஆகியோருடன் விடுமுறையைக் கழிக்க சென்றபோது பிரின்ஸுக்கு இந்த நோய் இருப்பது தெரியவந்துள்ளது.

இதன்போது அவரது கையில் வெண் படலம் போன்று தோன்றியிருந்தது கண்டறியப்பட்டது. சாதாரணமாக வெயிலால் ஏற்படும் வெண் படலத்திற்கும், இதற்கும் நிறைய வித்தியாசம் காணப்படுகிறது வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--