2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

’முஸ்லிம்களை நிராகரித்தால் இந்துத்துவா இல்லை’

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் முஸ்லிம்கள் இல்லாமல் இந்துத்துவா என்ற கோட்பாடே இல்லை எனத் தெரிவித்துள்ள, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், இந்துத்துவா என்பது சகோதரத்துவத்தையும், வேற்றுமையில் ஒற்றுமையையும் குறிப்பிடுவதாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வாழும் மக்கள் அனைவருக்கும், இந்துத்துவா என்பது அடிப்படையான தத்துவம் எனவும், இந்துத்துவா என்பது சகோதரத்துவத்தையும், வேற்றுமையில் ஒற்றுமை, தியாகம், சுயஅடக்கம், நன்றி செலுத்துதல் ஆகிய குணங்களைத்தான் வலியுறுத்துகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X