2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

யேமனில் தற்கொலைத் தாக்குதல்: 48 படையினர் பலி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 18 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனின் தென்பகுதி நகரான ஏடனில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், குறைந்தது 48 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக, இராணுவ அதிகாரிகளும் மருத்துவ அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், அந்நகரத்தில் இடம்பெற்ற ஒன்றுகூடல் ஒன்றில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அறிவிக்கப்படுகிறது.

ஏடனின் அல்-அரிஷ் நகரத்திலுள்ள அல்-சவ்லாபா தளத்தில் ஒன்றுகூடிய படையினருக்கு நடுவில், தன்னையும் படையினர் போன்று வெளிப்படுத்திய குறித்த தற்கொலைதாரி, இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

ஏடனில், 8 நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்றதொரு தாக்குதலில், 48 படையினர் கொல்லப்பட்டு, 29 பேர் காயமடைந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு உரிமை கோரியிருந்தது.  யேமனிய அரசாங்கத்துக்கும் ஹூதி போராளிகளுக்கும் இடையில் காணப்படும் முரண்பாட்டைப் பயன்படுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-கொய்தா போன்ற ஆயுதக் குழுக்கள், இவ்வாறான தாக்குதல்களை நடத்துவது வழக்கமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .