2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

லிபிய விமான விபத்து;விசாரணை ஆரம்பம்

Super User   / 2010 மே 13 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிபிய விமானமொன்று டிரிபோலி விமான நிலையத்தில்  நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

குறித்த விமானம் டிரிபோலி விமான நிலையத்தில் நேற்றுக் காலை நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், இதில் பயணம் செய்த 104 பேர் உயிரிழந்திருந்தனர்.

எனினும் குறித்த விமானத்தில் பயணித்தை மேற்கொண்டிருந்த  8 வயது சிறுவன் ஒருவன் மாத்திரம் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளான்.

தென்னாப்பிரிக்காவின் ஜோன்ஸ்பெர்க் விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி  நேற்றுக் காலை 6 மணியளவில், 94 பயணிகள் மற்றும் 11 அதிகாரிகளுடன், லிபியாவின் டிரிபோலி நகருக்கு சென்றுகொண்டிருந்த அந்நாட்டின் அஃப்ரிகுயா என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .