Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 01 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் ஏற்பட்டுள்ள ஆயுதந்தாங்கிய வன்முறைகளுக்காக, இஸ்லாம் மதத்தைக் குறைகூறுவது சரியன்று என, கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு போலந்துக்குச் சென்றிருந்த பாப்பரசர், அங்கிருந்து இத்தாலியின் றோமுக்குத் திரும்போது, விமானத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரான்ஸில் வைத்து, றோமன் கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர், முஸ்லிம் இளைஞன் ஒருவனால் கழுத்தறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பாகக் கேட்கப்பட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தத் தாக்குதல், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவினால் உரிமை கோரப்பட்டிருந்தது.
எனினும், அதற்கு மாறான நிலைப்பாட்டை, பாப்பரசர் வெளிப்படுத்தினார். "வன்முறைகளுக்காக இஸ்லாமை அடையாளப்படுத்துதல் சரியன்று என நான் நினைக்கிறேன். அது சரியான விடயமன்று, உண்மையானதுமன்று" என அவர் தெரிவித்தார்.
கிறிஸ்தவ சமயமும், இதற்கு முன்னர் வன்முறை கொண்ட வரலாற்றைக் கொண்டது என்ற நிலையில், அம்மதத்தின் தலைவர் என்ற வகையில், மிதமான போக்கையே, பாப்பரசர் வெளிப்படுத்தினார்.
"அனேகமான எல்லா மதங்களிலும், சிறியளவிலான அடிப்படைவாதக் குழுவொன்று எப்போதும் காணப்படுகிறது என நான் நினைக்கிறேன். நாங்களும் (கிறிஸ்தவர்களும்) அவர்களைக் கொண்டிருக்கிறோம்" என அவர் தெரிவித்தார்.
30 minute ago
40 minute ago
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
40 minute ago
23 Oct 2025