2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

ஸ்பெய்ன் பிரதமரின் மனைவிக்கும் கொரோனா தொற்று

Editorial   / 2020 மார்ச் 15 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்ன் பிரதமர் பெட்ரோ சென்சஸின் மனைவி பெகோனா கொமெஸுக்கு கொவிட் - 19 கிருமித்தொற்று இருப்பது உறுதியாகியிருக்கிறது.

ஸ்பெய்ன் முழுவதும் 30 நாட்களுக்கு முடக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில், பெகோனா கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்.

நாளையிலிருந்து முடப்படும் ஸ்பேயினில் வேளைக்குச் செல்வதற்கும் உணவு வாங்குவதற்கும் மட்டும் பொதுமக்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர்.

அதைத் தவிர்த்து வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு அங்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அங்கு 6,000ஐத் தாண்டிவிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .