2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

இந்தோனேஷிய சுனாமியால் 272 பேர் பலி

Super User   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தோனேஷியாவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த பூகம்பத்தையடுத்து ஏற்பட்ட சுனாமியினால் 272 பேர் பலியாகியிருப்பதாகவும் 400 பேர் காணாமல் போயிருப்பதாகவும் இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமத்ரா தீவுக்கருகில் ஏற்பட்ட இப்பூகம்பத்தினால் 10 அடி உயரமான அலைகள், தூரப் பிரதேசங்களிலுள்ள தீவுகளின் கரையோரக் கிராமங்களைத் தாக்கியுள்ளன.

கொந்தளிப்பான கடல் மற்றும் மோசமான காலநிலை காரணமாக, மீட்பு நடவடிக்கைகள் பாதிக்பப்பட்டதாகவும் கிராமவாசிகள் இரு நாட்கள் உதவிகளின்றி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சவக்குழிகளைத் தோண்டுவதற்கு போதிய எண்ணிக்கையில் ஆட்கள் இல்லாததால் பல சடலங்கள் கடற்கரைகளிலும் வீதிகளிலும் கிடந்ததாக மென்டாவாய் மாவட்டத் தலைவர் எடிசன் சலேலோ பாஜா தெரிவித்துள்ளார்.

இன்று காலை இந்தோனேஷிய கடற்படைக் கப்பல்கள் மருந்துப்பொருட்களையும் உணவுகளையும் ஏற்றிக்கொண்டு மேற்படி தீவுகளை நோக்கிப் புறப்பட்டன. அத்துடன் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்புப் பணியாளர்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்தோனேஷியாவின் ஜாவா தீவிலுள்ள எரிமலையொன்று நேற்று வெடித்ததால்  28 பேர் பலியானதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் இன்று புதன்கிழமை தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .