2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

18ஆம் நூற்றாண்டு கப்பல் கண்டுபிடிப்பு

A.P.Mathan   / 2010 ஜூலை 16 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


18ஆம் நூற்றாண்டுக்கு உரியதாக கருதப்படும் கப்பல் ஒன்றின் சிதைவு அமெரிக்காவின் லோவர் மன்ஹாட்டன் பகுதியில் பழைய உலக வர்த்தக மையத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க் நகரை விரிவுபடுத்தும் நோக்கில் ஹட்ஸன் ஆறு நிரப்பப்பட்ட போது 32அடி நீளமான இந்த கப்பலும் நிரப்பும் பணியில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நூற்றாண்டுகளின் பின் கப்பலில் காணப்பட்ட மரங்கள் காற்றுடன் தொடர்புபடுவதால் விரைந்து அவை பழுதடையக் கூடும். ஆகையினால் இவற்றை பாதுகாக்கும் முயற்றியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


44 கிலோகிராம் நிறையுள்ள ஒரு நங்கூரமும் இதே இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த நங்கூரம் இந்த கப்பலுக்குரியதா என்பது பற்றி எதுவும் கூற முடியாதுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

1960ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் முதலாவது உலக வர்த்தக மையம் கட்டப்பட்டபோது பாதிக்கப்படாத நிலத்திலிருந்தே இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2001இல் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பிரபலமான இரட்டைக் கோபுரங்கள் அழிக்கப்பட்டன. அதன் பின்னர் அந்த இடத்தில் புதிய உலக வர்த்தக மையத்தினை அமைக்க தொடங்கினர்.

புதிதாக கட்டப்படும் இக்கட்டிடம் 1776அடி உயரங்களைக் கொண்டது. இதன் பணிகள் 2013ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .