2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

ஈராக்கில் தாக்குதல்கள்; 19 பேர் பலி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் குறைந்தபட்சம் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈராக்கின் மேற்கிலுள்ள அன்பர் மாகாணத்தில் இரவு பூராகவும் மேற்படி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்படி தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளவர்களில் 16 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 3 சிவிலியன்களும் அடங்குவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிரிய எல்லையிலிருந்து 110 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ருட்பா பகுதியிலுள்ள சோதனைச்சாவடியொன்றில் வெடிபொருள்கள் நிரப்பட்ட கார் மூலம் தற்கொலைதாரி வெடிக்க வைத்துள்ளார். முதலவதாக மேற்கொள்ளப்பட்டுள் இத்தாக்குதலில்  பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். 

இதனைத் தொடந்து மற்றுமொரு தற்கொலைதாரி, வெடிபொருகள் நிரப்பப்பட்ட வாகனத்தை வீதிச் சந்தியில் வெடிக்க வைத்துள்ளார். இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வரும் லொறிச் சாரதிகள் மூவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்படி மாகாணத்தின் ஏனைய பகுதிகளில்  துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எழுவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--