Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈராக்கில் அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகள் முற்றுப் பெற்றுள்ளதை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வரவேற்றுள்ளார்.
ஈராக்கின் எதிர்காலம் அந்த நாட்டு மக்களின் கைகளில் அளிப்பதற்கு அமெரிக்கா பெரும் விலையை செலுத்தியுள்ளதாகவும் வெள்ளை மாளிகையில் உரையாற்றிய பராக் ஒபாமா தெரிவித்தார்.
அமெரிக்க இராணுவத்தினரின் தியாகத்தை எண்ணும்போது, பெரும் பிரமிப்பு அடைவதாகவும் பராக் ஒபாமா குறிப்பிட்டார்.
ஆனாலும், தற்போது அமெரிக்காவின் அவசர இலக்கு பொருளாதாரத்தை மீட்டெடுப்பது ஆகும் எனவும் அவர் கூறினார்.
ஈராக் நாட்டு அரசாங்கத்திற்கும் அந்த நாட்டு மக்களுக்கும் அமெரிக்காவானது தனது ஆதரவை தொடர்ந்து வழங்கும் எனக் கூறிய பராக் ஒபாமா, தற்போது ஈராக் நாட்டு மக்கள் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பு வகிப்பதில் தலைமை தாங்குவதாகவும் கூறினார்.
6 hours ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
05 Nov 2025