2021 ஜனவரி 16, சனிக்கிழமை

கௌதமாலாவில் அவசரகாலநிலை பிரகடனம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கௌதமாலாவில் கடும் மழையால் ஏற்பட்டிருக்கும் பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக அங்கு அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பஸ் ஒன்று மண்சரிவில் அகப்பட்டுள்ள நிலையில், பஸ்ஸில் பயணித்த 10 பயணிகள் உட்பட  18 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மே மாதத்தில் வீசிய 'அகதா' புயலின் பின்னர்  மேற்கொள்ளப்பட்ட நிர்மாணப் பணிகளை இது இல்லாமல் செய்து விடும் என ஜனாதிபதி அல்வரோ கொலம் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தப் பாதிப்புக்களின் புனரமைப்புகளுக்காக அவசர நிதியுதவி வழங்குமாறு நாடாளுமன்றத்திடம் ஜனாதிபதி அல்வரோ கொலம் கோரியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .