Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆயுத உற்பத்திக்கான அமைச்சர் அப்துல் கையூம் ஜட்டோய் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
அப்துல் கையூம் ஜட்டோய், இராணுவத்தினரை கடுமையாக விமர்சித்ததாகவும், இதனாலேயே அவர் பதவி விலகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், நாட்டைப் பாதுகாப்பதற்காகவே இராணுவத்தினருக்கு சம்பளம் வழங்கப்படுவதுடன், அரசியல் படுகொலைகளுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை எனவும் கடந்த சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் அப்துல் கையூம் ஜட்டோய் தெரிவித்திருந்தார்.
இது பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் வெளியாகியிருந்ததுடன், இது தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி விளக்கம் கோரியிருந்ததார்.
இதனையடுத்தே, அமைச்சர் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago