Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
	
பயங்கரவாதம் மற்றும் சிவில் அணுவாயுத கூட்டுறவு தொடர்பில் பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி  நிக்கொலஸ் சர்கோஷியும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடவுள்ளனர்.
	
	பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோஷி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு சென்றுள்ளார்.  இந்நிலையிலேயே, இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
இந்தியாவில் இரு அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவார்களென்று எதிர்பார்க்கப்படுகிறது.
	
	அணுவாயுத தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்வதில் பிரான்ஸ் முன்னிலையிலுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
	
	இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட நிக்கலஸ் சர்கோஷி, நேற்று ஞாயிற்;றுக்கிழமை பெங்களூரிலுள்ள விண்வெளி ஆய்வு மையத்தையும் சென்று பார்வையிட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது,  அவரது பாரியார் கார்லா புரூனியும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago