2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

சீனக்குடாவில் மான் மோதி விபத்து: பெண் ஒருவர் படுகாயம்

Editorial   / 2026 ஏப்ரல் 05 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ. அச்சுதன்

திருகோணமலை, சீனக்குடா பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது மான் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

கிண்ணியாவிலிருந்து திருகோணமலை நோக்கி சனிக்கிழமை (04) மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது. இதில் ஒரு தம்பதியினரும் அவர்களது குழந்தையும் பயணித்துள்ளனர். இவர்கள் திருகோணமலை, பாலையூற்றில் உள்ள பெண்ணின் தாய் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

சீனக்குடா வளைவுப் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மான் ஒன்று குறுக்கே பாய்ந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பெண், உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் கிண்ணியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .