Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 14 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலியல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்ட, விக்கி லீக்ஸ் இணையத்தள ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ்சுக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்று இன்று பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
ஜனவரி 11 ஆம் திகதி அடுத்த விசாரணை நடைபெறும் வரை, ஜூலியன் அசேஞ் 240,000 ஸ்ரேலிங் பவுண் ரொக்கப் பிணையில் செல்ல வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் ஹோவார்ட் ரிடில் அனுமதி வழங்கினார்.
அசேஞ் தனது நடமாட்டம் கண்காணிப்படுவதற்காக இலத்திரனியல் சாதனமொன்றை அணிந்திருக்க வேண்டும் எனவும் தினமும் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியரான அசேஞ் மீது சுவீடனில் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சுவீடன் நீதிமன்றம் விடுத்த பிடியாணை காரணமாக அவர் பிரித்தானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
56 minute ago
6 hours ago
15 Sep 2025
15 Sep 2025
tamilsalafi.edicypages.com Wednesday, 15 December 2010 03:57 AM
இவரது செயல்பாடுகளை, நடவடிக்கைகளை யார் லீக் பண்ணுவது ??
Reply : 0 0
xlntgson Thursday, 16 December 2010 09:06 PM
அவருடன் பணியாற்றியவர்கள்!
அவர்கள் போட்டி விக்கிலீக்ஸ் ஒன்றை ஆரம்பித்து இருக்கின்றனர். அவர் சர்வாதிகாரமாக செயல் பட்டதாகவும் தெளிவு & சரியான கணக்கு பற்றி பேச அருகதை இல்லாதவர் என்று. ஆனால் செக்ஸ் குற்றத்தில் அல்லாமல் அவரை கைது செய்ய கடினம் ஏனெனில் அமெ. சட்டப்படி அரச இரகசியங்களை காசு கொடுத்து பெற்று வெளியிட்டாலும் கூட அவர்கள் ஜனநாயகத்துக்கு உயிர் கொடுக்கின்றார்கள் என்று. போட்டி விக்கிலீக்ஸ் அநாமதேயமான செய்திகளை மட்டுமே வெளியிடும் என்றும் கட்டணம் எதுவும் வழங்கப்படாதென்றும் அறிக்கை. ஊதியமில்லாத வேலை?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
6 hours ago
15 Sep 2025
15 Sep 2025