2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கொரிய பதற்ற நிலை குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபை அவசரகூட்டம்

Super User   / 2010 டிசெம்பர் 19 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொரிய தீபகற்பத்தில் அதிகரித்துவரும் பதற்ற நிலை தொர்பாக  ஐ.நா. பாதுகாப்புச் சபை தற்போது அவசர சந்திப்பொன்றை நடத்திக்கொண்டிருக்கிறது.

இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியொன்றில் தென்கொரியா இராணுவ பயிற்சி நிகழ்வொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளமை இப்பதற்ற நிலைக்கு காரணமாகும்.

காலநிலை சீராக இருந்தால்  இப்பயிற்சி நிகழ்வு திட்டமிட்டபடி நடத்தப்படும் என தென்கொரியா கூறிவருகிறது.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வடகொரியா இப்பயிற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இப்பயிற்சி இடம்;பெறவுள்ள தீவில் கடந்த மாதம் வடகொரியா ஷெல் தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ரஷ்யா, வடகொரியாவையும் தென்கொரியாவையும் அடக்கிவைக்கக்கூடிய சமிக்ஞையை ஐ.நா. அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

கொரிய பதற்ற நிலை ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்தவ நாடுகளுக்கிடையில் பிளவை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.

ஏனெனில் இப்பயிற்சித் திட்டத்தை தென்கொரியா கைவிட வேண்டும் என சீனாவும் ரஷ்யாவும் கூறுகின்றன.  ஆனால் தென்கொரியா மீதான ஆத்திரமூட்டல்கள் காரணமாக அது பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்கு உரித்துடையது என அமெரிக்கா கூறுகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--