2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

லிபியாவில் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாமென எச்சரிக்கை

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உள்நாட்டு யுத்தமொன்று லிபியாவிலும் ஏற்படலாமென்று லிபியா ஜனாதிபதி முவம்மர் கடாபியின் மகனான சைப் அல் இஸ்லாம் எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் லிபியாவின்; தலைநகரான திரிபோலியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர் தொலைக்காட்சியொன்றில் உரை நிகழ்த்துகையிலேயே இதனைக் கூறினார்.

குறிப்பிடத்தக்க அரசியல் சீர்திருத்தங்களை செய்வதற்கு தயாராகவிருப்பதாகவும் அவர் கூறினார்.  பொலிஸாரும் இராணுவத்தினரும் இழைத்த தவறுகளை ஏற்றுக்கொண்ட சைப் அல் இஸ்லாம், ஆனால் அறிக்கைகள் கூறும் அளவிற்கு மரணங்கள் நிகழவில்லையெனவும் தெரிவித்தார்.

இருப்பினும் கடந்த வியாழக்கிழமை முதல் 233 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.   


  Comments - 0

  • xlntgson Wednesday, 23 February 2011 09:35 PM

    கடாபி நாட்டை விட்டு ஓடிவிட்டார் என்று வதந்திகள்
    இல்லை. நாட்டிலேயே தான் இருக்கின்றேன் தலை நகரில் இல்லை என்று அவர் விட்டதாக அறிக்கை வேறு! உள் நாட்டு யுத்தம் பொதுக்கூட்டங்களில் சுடுவதானால் ஏற்படுகிறது பொதுக் கூட்டங்களை தடை செய்தால் ஜனநாயகம் இல்லை என்று கூக்குரல்! கடாபிக்கும் வயதாகி விட்டது. மகனை ஆட்சிக்கட்டிலேற்றி கண்ணை மூடலாம் என்று பார்க்கிறார் போலும், அவரும் காயமடைந்தார் என்று ஊர்ஜிதமில்லாத செய்திகள் முஸ்லிம் நாடுகள் என்றால் எல்லாம் ஊர்ஜிதமில்லாத செய்திகள் தான் குழப்புவது யார் என்று தெரிகிறதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--