2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

இஸ்ரேலில் பாரிய தீ விபத்து: நால்வர் பலி

Kogilavani   / 2011 ஜூன் 17 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இஸ்ரேலிய தொடர்மாடிக் கட்டிடமொன்றில் இன்று இடம்பெற்ற தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன்; மேலும் 90 பேர்  சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

ஏரி வாயு குழாயொன்று வெடித்ததாலேயே மேற்படி விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 4  மாடிகள் கொண்ட இக்கட்டிடம் அழிந்துள்ளது.

தொடர்மாடிக் கட்டிடத்தில் 4ஆம் மாடியில் பாரிய தீ சுவாலை ஏற்பட்டதாகவும் ஆனால் பார்ப்பதற்கு அது குண்டு வெடிப்பைப் போன்று இருந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் ஒருவர தெரிவித்துள்ளார். எனினும் 'இது பயங்கரவாதிகளின் தாக்குதல் அல்ல' என அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் 3 பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர்.

இத் தொடர்மாடிக் கட்டிடத்தில் 150 குடும்பங்கள் வசித்து வந்தததாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கட்டிடத்திற்கு அருகிலிருந்த கட்டிடங்கள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இருவரை இஸ்ரேலிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் எரிவாயு குழாயை வெட்டியபோது இந்த அனர்த்தம் நடந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உலோகத்தாலான எரிவாயு குழாய்களை திருடி விற்பனை செய்வதற்கு அவர் முயன்றதாக புலானாய்வாளர்கள் சந்தேகம் தெரிவிக்கன்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X