2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவரான இந்திய அமைச்சர் சரத் பவார் தாக்கப்பட்டார்

Super User   / 2011 நவம்பர் 24 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய மத்திய அமைச்சரும் சர்வதேச கிரிக்கெட் சபைத் தலைவருமான சரத் பவார் மீது நபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை தாக்கியுள்ளார். 

இந்திய தலைநகர் புதுடில்லியில் நடந்த வைபவமொன்றில் விவசாய நுகர்வோர் விவகார உணவு மற்றும் பொது விநியோக அமைச்சரான சரத் பவார் (71) பங்குபற்றியபோது  அவரின் கன்னத்தில் இந்நபர் அறைந்தார்.

ஹர்வீந்தர் ராம் சிங் எனும் இந்பரே,  ஊழல் வழக்கில்குற்றவாளியாக காணப்பட்ட முன்னாள் தொலைதொடர்புகள் அமைச்சர் சுக் ராம்  மீதும்  கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக நம்பப்படுகிறது.

சீக்கியரான அவ்விளைஞர்,  சீக்கியரகளின் ஆடையுடன் அணியும் சிறிய கத்தியொன்றையும் வைத்திருந்தார். தான் அமைச்சரவை அறைவதற்காக திட்டமிட்டு அங்கு வந்தாக அவர் கூறினார்.

இத்தாக்குதலினால் அமைச்சர் சரத் பவார் நிலை தடுமாறினாலும் பின்னர் சுதாகரித்துக் கொண்டு வைபவம் நடைபெற்ற இடத்திலிருந்து வெளியேறிச் சென்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரத் பவார், இது முட்டாள்தனமான நடவடிக்கை எனக் கூறினார்.

அந்த இளைஞர் மீது வழக்குத் தொடரப்படுமா எனக் கேட்டபோது, 'அவ்விவகாரத்தை பொலிஸார் கையாள்வர்' என பதிலளித்தார்.

அவ்விளைஞர் ஊடகவியலாளர்கள் மத்தியில் இருந்ததை தான் கண்டதாகவும் பாதுகாப்பு குறைவாக இருந்த சூழலை அவர் சாதாகமாக பயன்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் பவார் கூறினார்.

இச்சம்பவம் குறித்து அமைச்சர் சரத் பவாருடன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உரையாடியதுடன் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியல் கட்சிகள் பலவும் இதை கண்டித்துள்ளன.  

தாக்குதல் நடத்தியவர் தண்டிக்கப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி மற்றும் சமாஜ்வாதி  கட்சி ஆகியன கூறியுள்ளன. எனினும் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் எனவும் அவை கூறியுள்ளன.


  Comments - 0

 • sunder Friday, 25 November 2011 03:10 AM

  பாராட்டுக்கள் ஹர்வீந்தர்.

  Reply : 0       0

  Ramesh Thursday, 24 November 2011 09:02 PM

  இந்தியாவில் மாத்திரமா விலை அதிகரிக்குது

  Reply : 0       0

  suresh Thursday, 24 November 2011 09:05 PM

  ஹர்வீந்தர் ராம்சிங்குக்கு பாராட்டுக்கள். பலரின் ஆதங்கத்தை நீங்கள் போக்கியிருக்கிரீர்கள்.

  Reply : 0       0

  segu Thursday, 24 November 2011 10:13 PM

  இது போன்று நடக்க வேண்டும் அப்போது தான் அரசாங்கத்திற்கு மக்களின் கஷ்டம் புரியும். அரசியல் வாதிகளும் திருந்துவார்கள்.

  Reply : 0       0

  Kethis Thursday, 24 November 2011 10:27 PM

  இந்திய எதிர்க்கட்சிகள் கருத்து இத்தாக்குதலை மறைமுகமாக நியாயப்படுத்துவது போல் உள்ளது.

  Reply : 0       0

  Mohammed Hiraz Friday, 25 November 2011 12:44 AM

  புஸ்ஸுக்கு செருப்படி, பவாருக்கு கன்னத்தில் அறைஇ ஆகா உலக மக்கள் விழிப்படைந்து கொண்டிருக்கிறார்கள், இனி உலகில் உள்ள எல்லா அரசியல் வாதிகளுக்குமே ஒரு கிலி மனதில் எழத்தான் செய்யும் ... தொடங்கி வைத்ததை நடத்தி கொண்டிருப்பதும் அதன் மூலம் புத்தியில் உறைக்க வைப்பதும் மக்கள் பொறுப்பன்றோ.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .