Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 நவம்பர் 27 , பி.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரியாவின் மீது தடைகளை விதிப்பதற்கு அரபு நாடுகளின் லீக் நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சொத்துக்களை முடக்குதல், முதலீடுகளை தடுத்தல் என்பனவும் இவற்றில்அடங்கும்.
சிரிய அரசாங்கத்துக்கு எதிராக பல மாதங்களாக பாரிய ஆர்ப்பாட்டங்கள் தொடரும் நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குவதற்கு சிரிய அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளினால் சுhர் 3500 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த அடக்குமுறை குற்றச்சாட்டின் காரணமாக சிரியாவை இம்மாத முற்பகுதியில் தனது அங்கத்துவத்திலிருந்து அரபு லீக் இடைநிறுத்தியது.
இந்நிலையில் சிரியாவின் நிலைமையை அவதானிப்பதற்கு அரபு லீக் நாடுகளைச் சேர்ந்த சுமார் 4000 கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை சிரியா நிராகரித்த பின்னணியில் இத்தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எகிப்தின் கெய்ரோ நகரில் கூடிய அரபு லீக் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையிலான இத்தடைகளை விதிக்கும் தீர்மானத்தை அங்கீகரித்தார். இத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அதற்கு ஆதரவாக 19 வாக்குகளும் எதிராக 3 வாக்குகளும் கிடைத்தன.
கட்டார் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான ஷேக் ஹமட் பின் ஜாஸிம் அல் தானி இத்தடை குறித்த விபரங்களை கெய்ரோவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்டார்.
• சிரிய மத்திய வங்கியுடனான கொடுக்கல் வாங்கல்களை இடைநிறுத்துதல்.
• சிரியாவில் அரபு நாடுகளின் அரசாங்கங்களால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கான நிதியை நிறுத்துதல்
• சிரியாவின் சிரேஷ்ட அதிகாரிகள் ஏனைய அரபு நாடுகளுக்கு பயணம் செய்தற்கு தடை விதித்தல்
• ஜனாதிபதி பஷார் அல்அஸாத் தலைமையிலான சிரிய அரசாங்கத்தின் சொத்துக்களை முடக்குதல் ஆகியன இத்தடைகளில் அடங்கும்.
அரபு லீக்கின் ஸ்தாபக நாடுகளில் ஒன்றான சிரியா, இத்தடைத் தீர்மானங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இது அரபு ஐக்கியத்தின் மீதான துரோகம் எனவும் கூறியுள்ளது.
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
pasha Monday, 28 November 2011 02:19 PM
அடுத்தது சிரியா
Reply : 0 0
avathaani Monday, 28 November 2011 04:21 PM
இந்த விதமான தடைகளை, பாலஸ்தீனில் இஸ்ரேல் மேற்கொள்ளும் அட்டூழியங்களுக்கு எதிராக அரபுலீக் நாடுகள் இஸ்ரேலுக்கு அல்லது அதனை அரவணைத்து போசிக்கும் மேற்கு நாடுகளுக்கு எதிராக செய்யவில்லை? இதிலும் மேற்கின் அழுத்தம் உள்ளதோ? ஆசாத் அரசும் தனது சகோதரனின் அநியாய உயிர் இழப்புகளை தவிர்த்து சுமுக தீர்வு காணவேண்டும். எதிரிக்கு களம் அமைக்க அனுமதிக்க கூடாது. முஸ்லிம் உம்மாக்கள் பிராத்தனை செய்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago