2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

கனிமொழி உட்பட ஐவருக்கு பிணை

Menaka Mookandi   / 2011 நவம்பர் 28 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி உட்பட ஐவருக்கு பிணை வழங்க டில்லி உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

கனிமொழியில் பிணை மீதான மனு எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதி விசாரிக்கப்படவிருந்த நிலையில் இவ்வழக்கில் மேலும் 5 பேருக்கு இந்திய உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது.

இந்நிலையில் தமது மனுக்களை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத் குமார் உட்பட 5 பேர் கோரினர்.

இதனையடுத்து கடந்த 25ஆம் திகதி இவர்களின் மனு மீதான விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தீர்ப்பு இன்று திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதன்படி இப்பிணை மனுக்கள் மீதான விசாரணை டில்லி உயர் நீதிமன்றத்தால் இன்று திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத் குமார் உட்பட ஐவரும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

 

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழி, கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரின் பிணை மனுக்கள் 4 முறை டில்லி பாட்டியாலா மத்திய புலனாய்வுத்துறை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது. 

இந்நிலையில் அவர் மீண்டும் பிணை கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடத்தப்பட்ட நிலையிலேயே அவர்கள் பிணையில் செல்ல இன்று அனுமதி கிடைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .