2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மலேசிய விமானம் தரையிறங்கியது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமானத்தை தரையிறக்குவதற்கான கியர் இயங்காமையால் நடுவானில் சுமார் நான்கு மணிநேரம் வட்டமிட்டுகொண்டிருந்த மலேசிய விமானம் நீண்டநேர முயற்சியின் பின் எவ்விதமான பாதிப்புகளுமின்றி தரையிறக்கப்பட்டது என்று மலேசிய செய்திகள் தெரிவிக்கின்றன்.

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரகத்தை சேர்ந்த எம்.எச்.192 என்ற மலேசிய பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் மலேசிய நேரப்படி நேற்றிரவு 10.09 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இந்தியாவின் பெங்களூருக்கு 166 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தையே சுற்றி சுற்றி வந்தது.

இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் ஏனைய விமான சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையிலேயே அந்த விமானம் எவ்விதமான பாதிப்புகளும் இன்றி மிக கவனமாக தரையிறக்கப்பட்டது.

எம்.எச்.370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 239 பயணிகளுடன் மாயமான நிலையில், மலேசிய விமானங்களில் இதுபோன்று அடிக்கடி இயந்திர கோளாறு ஏற்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .