2021 மார்ச் 01, திங்கட்கிழமை

இந்தியாவில் இந்து மதத் திருவிழாவில் சனநெருக்கடியால் இறப்புக்கள்

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இந்துக் கோவிலொன்றுக்கு வெளியே 150,000 பேரளவிலான சனநெருக்கடியில் சிக்கி, குறைந்தது 10 யாத்திரிகர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பைத்யநாத் ஜோதிர்லிங்கா ஆலயத்தின் கட்டிடமொன்றின் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து, யாத்திரிகர்கள் அந்த கட்டடத்தை நோக்கி படையெடுத்ததாலேயே சன நெருக்கடி ஏற்பட்டதாக அந்த பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கிலோமீற்றர் நீளமான வரிசையில் காத்திருந்தவர்கள், திறக்கப்பட்ட கதவுகளை நோக்கி ஏனையவர்கள் ஓடி வரும்போது மிதிபட்டதாக ஜார்க்கண்ட் பொலிஸின் மேலதிக பணிப்பாளர் நாயகம் எஸ்.என் பரதன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மத விழாக்களில் கட்டுப்படுத்த முடியாத சனத்தொகை காரணமாக பொலிஸார், தன்னார்வத் தொண்டர்கள் தடுமாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .