2021 மார்ச் 01, திங்கட்கிழமை

கறுப்பின இளைஞரை கொன்ற டெக்ஸாஸ் பொலிஸ் பதவி நீக்கம்

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரம் டெக்ஸாஸ் கார் விற்கும் நிலையமொன்றில் இடம்பெற்ற சந்தேகத்துக்குரிய கொள்ளை சம்பவம் தொடர்பில், ஆயுதம் தரிக்காத கறுப்பின இளைஞர் ஒருவரை பொலிஸ் அதிகாரியொருவர் கொன்றமையானது, பாரிய பின்விளைவைத் தரக்கூடிய தீர்மானம் என்பதால், அந்த பொலிஸ் அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நகர பொலிஸ் தலைமையதிகாரி தெரிவித்துள்ளார்.

பொலிஸார் விசாரணையை முடித்த பின்னர், 49 வயதான ஆர்லிங்டன் அதிகாரியான பிராட் மில்லர், குற்றவியல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்குவார் என பொலிஸ் தலைமையதிகாரி வில் ஜோன்சன் மேலும் தெரிவித்துள்ளார்.

மில்லரால் ஏற்படுத்தப்பட்ட தர்க்கத்தால், அவரும் ஏனைய அதிகாரிகளும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மிசூரி, பெர்குஸன் பகுதியில் ஆயுதம் தரிக்காத 18 வயதான மைக்கல் பிறவுண் வெள்ளையின அதிகாரியால் கொல்லப்பட்டு ஒரு வருட பூர்த்திக்கு இரண்டு நாட்களுக்கு முன்னே 19 வயதான கிறிஸ்டியான் டெய்லர் கொல்லப்பட்டிருந்தார்.

பிறவுனின் மரணத்தினைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், நாடளாவிய ரீதியில் கறுப்பின உயிர்கள் கவனத்திலெடுக்கப்பட வேண்டும் எனக்கூறப்பட்டதோடு, பொலிஸார் சிறுபான்மையினரைக் கையாள்வது தொடர்பில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .