Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போடு இணைந்த எகிப்தைச் சேர்ந்த அமைப்பொன்று, குரோஷிய பணயக்கைதி ஒருவரைத் தலை துண்டித்துக் கொலை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அது தொடர்பான புகைப்படமொன்றையும் அது வெளியிட்டுள்ளது.
இவர் கொல்லப்படுவார் என ஒரு வாரத்துக்கு முன்னதாக காணொளியொன்றை அவ்வமைப்பு வெளியிட்டிருந்த நிலையிலேயே, தற்போது தலை துண்டிக்கப்பட்ட புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளது.
“காலக்கெடு முடிவடைந்ததன் பின்னரும், இஸ்லாமியத் தேசியத்துக்கெதிரான சிரியாவின் பங்குபற்றுகை காரணமாக, குரோஷியர் ஒருவரின் கொலை” எனத் தலைப்பிடப்பட்ட நிலையில் இப்புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இப்புகைப்படம் உண்மையானதா என்றோ அல்லது புகைப்படத்தில் காணப்பிக்கப்படும் நபர் உண்மையிலேயே கொல்லப்பட்டாரா என்பது குறித்தோடு, உறுதிப்படுத்த முடிந்திருக்கவில்லை. இந்நிலையில் கருத்து வெளியிட்டுள்ள குரோஷிய பிரதமர் ஸொரான் மிலானோவிச், “எனது அமைதியைக் கலைப்பதோடு, நாங்கள் பார்ப்பது உண்மையானது தானா என்பதை நாங்கள் 100 சதவீத உறுதியுடன் உறுதிப்படுத்த முடியாது என்பதை குரோஷிய மக்களுக்குத் தெரிவிப்பது எனது கடமையாகும். அத்தோடு, இந்நிலை மிகவும் அச்சமூட்டுவதாகும்” என்றார்.
“எதிர்வரும் சில நாட்களில் உறுதிப்படுத்த முடியுமோ எனத் தெரியவில்லை, ஆனால் நாம் பார்ப்பது சிறப்பானதாக இல்லை. ஏனைய நாட்டுப் பிரஜைகளுக்கு நடந்தது. முதன்முறையாக குரோஷிய நாட்டவர் ஒருவருக்கு நடந்துள்ளது என அஞ்சுகிறேன்” எனவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு, இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அந்நாடு அறிவித்துள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago