Shanmugan Murugavel / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கிலுள்ள இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுடன் இணைவதற்காக, அவுஸ்திரேலியாவை விட்டு விமானம் மூலம் வெளியேற முயன்ற ஏழு இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக, அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் இன்று தெரிவித்தார்.
அவர்கள் எங்கு வைத்துக் கைது செய்யப்பட்டார்கள் என்ற விபரத்தை, அவுஸ்திரேலிய அதிகாரிகள் இன்னமும் தெளிவுபடுத்தியிருக்கவில்லை.
தற்போதைய நிலையில், குறைந்தது 70 அவுஸ்திரேலியர்கள் ஈராக்கிலும் சிரியாவிலும் ஆயுதக்குழுக்களுடன் இணைந்து போரிட்டு வருவதாகவும், அவுஸ்திரேலியாவிலுள்ள ஏறத்தாழ 100 பேர் இவர்களுக்கான இணைப்பாளர்களாகச் செயற்படுவதாகவும், பாராளுமன்றத்தில் வைத்து டொனி அபொட் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் ஆயுதக் குழுக்களில் இணைவது அண்மைக்காலமாக அதிகரித்துவரும் நிலையில், அதற்கெதிரான நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசாங்கமும் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு இணைவோரில் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டோரின் அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையை இல்லாதொழிக்கும் சட்டமூலமும் கொண்டு வரப்பட்டிருந்தது.
36 minute ago
49 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
49 minute ago
3 hours ago