Kogilavani / 2011 ஜனவரி 25 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயரமான ஹோட்டலொன்றின் 23 ஆம் மாடியிலிருந்து குதித்த பெண்ணொருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஆர்ஜென்டினாவில் இடம்பெற்றுள்ளது.
33 வயதான இப் பெண் புகழ்பெற்ற ஹோட்டலொன்றின் 23 ஆம் மாடியிலுள்ள உணவுவிடுதிக்குச் சென்று கோப்பி தருமாறு கோரினார். பின்னர் திடீரென அவர் தனது பாதணிகளை கழற்றிவிட்டு பாதுகாப்பு தடுப்புகளைக் கடந்து சென்று கீழே பாய்ந்துள்ளார்.
ஹோட்டல் முன்வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றில் அவர் விழுந்துள்ளார்.. அக்காரின் கூரை உடைந்த போதிலும் அப்பெண் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இப் பெண் தற்போது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார். இவரது இடுப்புப் பகுதியும், எலும்புகளும் முறிவடைந்துள்ளதுடன், பலத்தக் காயங்களும் ஏற்பட்டுள்ளதால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
அவருக்கு நுரையீரல் பகுதியும் சீறுநீரகமும் அகற்றப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அப்பெண் கீழ் நோக்கி விழுவதை கண்ட காரின் சாரதி தனது பாதுகாப்புக்காக காரிலிருந்து வெளியேறி தூர விலகிச் சென்றுள்ளார்.
'நான் காரிலிருந்து இறங்காமலிருந்தால் நிச்சயமாக இறந்திருப்பேன். வெடிகுண்டொன்று விழுவதாகவே முதலில் எண்ணினேனன்' என்று மேற்படி சாரதி தெரிவித்துள்ளார்.
'நான் செய்த முதல் வேலை எனது குடும்பத்தை அந்த இடத்திற்கு அழைத்ததுதான். பிறகு நான் அழுவதற்கு ஆரம்பித்தேன். ஏனெனில் அக்காட்சியை காண்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது' என்கிறார் அச்சாரதி.
8 minute ago
17 minute ago
3 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
3 hours ago
27 Oct 2025