2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான் துருப்பினர் மீது நேட்டோ ஹெலிகள் தாக்குதல்: 25 பேர் பலி

Super User   / 2011 நவம்பர் 26 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தான் துருப்பினர் மீது நேட்டோ படையினர் இன்று மேற்கொண்ட தாக்குதலில் பாகிஸ்தான் துருப்பினர் 25 பேர் பலியானதாக பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானுடனான எல்லையிலுள்ள மொஹ்மான்ட் பிராந்தியத்தில் பாகிஸ்தான் காவலரண் ஒன்றின்மீது நேட்டோ ஹெலிகொப்டர்கள் தாக்கியதாக பாகிஸ்தான் இராணுவம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

'எவ்வித ஆத்திரமூட்டல்களும் இடம்பெறாத நிலையில் பாரபட்சமான இத்தாக்குதல்' இடம்பெற்றதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தையடுத்து, ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படையினருக்கான விநியோகங்கள் இடம்பெறும் பாதையொன்றை பாகிஸ்தான் மூடியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தான் அறிந்துள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்துவதகாவும் நேட்டோ தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம், அல் கயீடாதலைவர்  ஒசாமா பின் லாடன் பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலைமையை இன்றைய தாக்குதல் மேலும் சிக்கலாக்கக்கூடும் என கருதப்படுகிறது.

இத்தாக்குதலில் உயிரிழந்தவரிகளில் மேஜர் தரத்திலான அதிகாரியொருவரும் அடங்குவதாக பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர் புக்துன்க்வா மாகாண ஆளுநர் மசூத் கௌஸர் இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலுக்கான பதிலடியாக நேட்டோ படையினருக்கு பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் தடுத்தவைத்துள்ளனர்.

40 தாங்கிகள் மற்றும் லொறிகளை ஜம்ருத் பாத் சோதனைச் சாவடியிலிருந்து நாம் திருப்பி அனுப்பியுள்ளோம் என சிரேஷ்ட அரசாங்க அதிகாரியான முதாஹிர் ஸெப் ராய்ட்டருக்கு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி:

அமெரிக்கா நேட்டோவுடனான உறவை மீளாய்வு செய்கிறது பாகிஸ்தான்  Comments - 0

 • Mohammed Hiraz Saturday, 26 November 2011 08:45 PM

  பழிக்கி பழி வாங்குமா? இல்லை மன்னிக்குமா? இல்லை காத்திருந்து தருனம் வரும்போது பாம்புபோல் சீரி கொத்துமா? இல்லை தீவிரவாதிகள் மூலம் பழி வாங்கும் படலததை தொடங்குமா? பாகிஸ்தான் எப்படியானாலும் நோடோவுக்கு பாரிய அழிவு எதிர்பார்த்து காத்திருக்கிறது இந்த செயல் மூலம்.

  Reply : 0       0

  meenavan Saturday, 26 November 2011 08:48 PM

  உங்களது சகோதரனை கொலை செய்வதற்கு எதிரிக்கு அனுமதி வழங்கியிருந்தீர்கள், இப்போது அவன் உங்களவர்களையே கொலை செய்து கொண்டிருக்கிறான்.

  Reply : 0       0

  samuha thondan Saturday, 26 November 2011 09:21 PM

  இது கட்டாயம் நடக்க வேண்டியவைதான்.

  Reply : 0       0

  sogotharan Sunday, 27 November 2011 06:54 PM

  யகூதி நசாராக்களை யார் உற்ற நபர்களாக்கி செயற்படுகிரார்களோ அவர்களும் அவர்களும் அவர்களை சார்ந்தவர்களே..... அல்குரான்.

  Reply : 0       0

  F.Ameer-A.Rasheed Monday, 28 November 2011 01:01 AM

  அமெரிக்கா எப்படி பாகிஸ்தானுடன் மோதல் தொடுப்பது என்று எதிர்பார்திருந்ததது போலும். அதனால்தான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் தூண்டி அதில் தான் நல்லமனிதன் என்று வேசம் போட்டது. அது பலிக்கவில்லை போலும். அதனால்தான் நேட்டோ மூலம் சீண்டி பார்க்க எண்ணி இப்படி செய்துள்ளது தொட்டிலும் ஆட்டி குழந்தையும் கிள்ளும் அமெரிக்கா.

  Reply : 0       0

  Ayub Monday, 28 November 2011 03:42 AM

  ஆனால் என்ன செய்யலாம்? அவர்கள் தான் உலகை ஆள்பவர்கள். வேண்டுமென்றால் பாகிஸ்தானுடனுள்ள அன்பினால் அழலாம். அல்லது அதனுடன் உள்ள கோபத்தினால் சந்தோசப்படலாம். அந்த நிலைப்பாடுகளின் அடிப்படையில் பெரிய பெரிய ஆய்வறிக்கைகளையும் வெளியிடலாம்.

  Reply : 0       0

  PUTTALAM MANITHAN Monday, 28 November 2011 06:11 AM

  என்ன செய்ய எதுவும் செய்ய முடியாது. ஆகேவே மன்னித்து விடுங்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .