Suganthini Ratnam / 2011 ஜனவரி 13 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்கு பிரேஸில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக 260 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
பிரேஸிலின் றியோ டி ஜெனிசோ நகரின் மலைப் பிரதேசமான தெரஸ்போலிஸ் பகுதியிலேயே பாரியளவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு படை அதிகாரிகள் 147 பேர் உயிரிழந்துள்ளனர்.
1000 பேர் தமது வீடுகளை விட்டு வெளியேறி பொதுஇடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். பலத்த காற்று காரணமாக மின்சாரம் மற்றும் தொலைபேசி வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தெரஸ்போலிஸ் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மண்சரிவுகளில் புதையுண்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் 800 மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். afp

11 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
24 minute ago