2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

உலகம் ரொம்ப கெட்டுப்போச்சு ; 3 ஆண்டுகளுக்கு முன்பைவிட அதிக ஊழல்

Super User   / 2010 டிசெம்பர் 09 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகம் அதிக ஊழல்மிக்கதாக மாறிவருவதாக ஊழலுக்கு எதிராகவும் வெளிப்படைத் தன்மைக்காகவும் குரல்கொடுக்கும் அமைப்பான ட்ரான்பரன்ஸி இண்டர்நெஷனல் மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலம்  தெரியவந்துள்ளது.

3 வருடங்களுக்கு முன்பிருந்ததைவிட அதிக ஊழல் மிக்கதாக இருப்பது கருத்துக்கணிப்பொன்று சுட்டிக்காட்டுகிறது.  இவ்வமைப்பினால் செவ்வி காணப்பட்டோரில் 56 சதவீதமானனோர் தமது நாடு ஊழல் மிக்கதாக மாறிவருவதாக தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான், நைஜீரியா, ஈராக், இந்தியா ஆகியன அதிக ஊழல் நிலவும் நாடுகளாக ட்ரான்பரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றைத் தொடர்ந்து சீனா, ரஷ்யா மற்றும் பல மத்திய கிழக்குநாடுகள் உள்ளன.

அதேவேளை, பி.பி.சி. மேற்கொண்ட கருத்துக்கணிப்பொன்றில் ஊழலானது அதிகம் பேசப்படும் பிரச்சினையாக உள்ளதென மக்கள் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வில் பங்குபற்றிய ஐந்தில் ஒரு பங்கினர் தாம் கடந்த மாதம் ஊழல் தொடர்பாக மற்றவர்களுடன் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றம், வறுமை, வேலைவாய்ப்பின்மை, உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற விடயங்களைவிட ஊழல் குறித்து மக்கள் அதிகம் கலந்துரையாடுவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேவேளை, அரசியல் கட்சிகளே அதிக ஊழல்மிக்கவை என மக்கள் கருதுகின்றனர் என்பது ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் ஆய்வில் தெரியவந்துள்ளது. 50 சதவீதமானோர் தமது அரசாங்கங்கள் இப்பிரச்சினையை எதிர்கொள்வதில்

ஆய்வில் பங்குபற்றிய நான்கில் ஒரு பங்கினர் கடந்த வருடம் பொலிஸாருக்கு தாம் லஞ்சம் வழங்கியதாக தெரிவித்துள்ளனர்.

29 சதவீதமான லஞ்சம் பொலிஸாருக்கும் 20 சதவீதமான லஞ்சம், அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கம்போடியா (84%), லைபீரியா (89%) ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் அதிகமாக லஞ்சம் வழங்கவேண்டிய நிலைக்குள்ளாக்கியுள்ளனர். டென்மார்க்கில் இது 0 சதவீதமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--