2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

பிரேஸிலில்அலங்கார ஊர்தியில் தீ; 4 பேர் பலி

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலில் களியாட்ட நிகழ்வின்போது அலங்கார ஊர்தியொன்றில் தீ பிடித்துக்கொண்டதில் குறைந்தபட்சம் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

பிரேஸிலிலுள்ள சன்ரொஸ் நகரில் இடம்பெற்ற அணிவகுப்பொன்றின்போதே இத்தீ பரவியது.

இந்த அலங்கார ஊர்தி மின்கம்பியொன்றில் முட்டியதைத் தொடர்ந்து தீ பிடித்துக்கொண்டதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்;.

இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான வீடுகளிலும் வீதிகளிலும் மின் தடைப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை  இருளில் மூழ்கிக்காணப்பட்டதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X