2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

எகிப்தில் பஸ் விபத்து; முன்பள்ளி மாணவர்கள் 47பேர் பலி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகிப்தின் மத்திய மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்த பஸ் ஒன்று ரயில் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 40 முன்பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

விபத்தின் போது உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் 4 முதல் 6 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் போது குறித்த பஸ்ஸில் 60 முன்பள்ளி மாணவர்கள் பயணித்ததாகவும் இவர்கள் பயணித்த பஸ் கெய்ரோவுக்கு தெற்கே சுமார் 350 கிலோமீற்றர் பகுதியில் வைத்தே விபத்துக்குள்ளானதாகவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சம்பவத்தை அடுத்து எகிப்தின் போக்குவரத்து அமைச்சர் தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.

அத்துடன், விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தேவையான சகல உதவிகளையும் உடனடியாக வழங்குமாறு எகிப்தின் ஜனாதிபதி மொஹமட் முர்ஸி உத்தரவிட்டுள்ளார் என்று அந்நாட்டு அரச ஊடகங்கள் அறிவித்துள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .