Shanmugan Murugavel / 2016 ஜூலை 17 , பி.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலக வேண்டுமா என்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பில், வெளியேற வேண்டுமென்ற பிரிவுக்கு ஆதரவு கிடைத்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டிய நிலைக்கு, அந்நாடு தள்ளப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்திருந்தன.
எனினும், நேற்று முன்தினம் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்பொன்றின்படி, இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு, 57 சதவீதமானோர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். 29 சதவீதமானோரே, அவ்வாறான வாக்கெடுப்பு ஆதரவு வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு, குறித்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து பதவியிலிருந்து விலகிய பிரதமர் டேவிட் கமரோனுக்குப் பதிலாகப் பதவியேற்றுள்ள பிரதமர் தெரேசா மே, புதிய தேர்தலொன்றைக் கோருவதற்குப் பதிலாக, தொடர்ந்து அரசாங்கத்துக்குத் தலைமை தாங்கிக் கொண்டுசெல்ல வேண்டுமென, 46 சதவீதமானோரும், 38 சதவீதமானோர், தேர்தலையும் கோரியுள்ளனர்.
5 hours ago
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
23 Nov 2025
23 Nov 2025