2021 பெப்ரவரி 24, புதன்கிழமை

‘இந்து சமுத்திரத்துக்குள் நீண்ட தூர ஏவுகணைகளை ஏவிய ஈரான்’

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 16 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இராணுவப் பயிற்சியொன்றின் இரண்டாம் நாளில், நீண்ட தூர ஏவுகணைகளை இந்து சமுத்திரத்துக்குள் ஈரானின் புரட்சிகர காவலர்கள் இன்று ஏவியதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதே பகுதியில் தரையிலிருந்து தரை நோக்கிச் செல்லும் ஏவுகணைகளும், ஈரானில் தயாரிக்கப்பட்ட புதிய ட்ரோன்களும் நேற்று சோதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே நீண்ட தூர ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.

இந்நிலையில், விமானந்தாங்கிக் கப்பல்கள், யுத்தக் கப்பல்கள் உள்ளடங்கலாக எதிரி போர்க்கப்பல்களுக்கெதிராக நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்துவதானது தங்களது மிகவும் முக்கியமான பாதுப்பு கொள்கை இலக்குகள் ஆகும் என காவலர்களின் தளபதி மேஜர் ஜெனரல் ஹொஸெய்ன் சலாமி தெரிவித்ததாக அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

குறைந்த வேகமுடைய ஏவுகணைகளைப் பயன்படுத்துவதைப் பார்க்க, 1,800 கிலோ மீற்றர்கள் வீச்சத்தைக் கொண்ட குறித்த ஏவுகணைகள் மூலம் சமுத்திரத்தில் நகரும் இலக்குகளை தாங்கள் தாக்கலாமென சலாமி கூறியுள்ளார்.

இப்பயிற்சிகளின் இலக்குகள், ஓமான் வளைகுடா, வட இந்து சமுத்திரத்தில் காணப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .