Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டார் அரச குடும்பத்துக்குச் சொந்தமான சாதனங்களை ஐக்கிய அரபு அமீரக உளவாளிகள் ஹக் செய்ததாகவும், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் முதற்பெண்மணி மிச்செல் ஒபாமா, ஷெய்கா மொஸா பின் நாஸருக்கிடையிலான தனிப்பட்ட தொடர்பாடல்களை இடைமறித்ததாக நியூ யோர்க் டைம்ஸின் பத்திரிகையாளர் நிக்கோல் பேர்ல்றொத்தின் திஸ் இஸ் ஹள தே டெல் மீ த வேர்ல்ட் என்ட்ஸ் புத்தகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், குறித்த புத்தக்கத்தின் உள்ளீடுகளுடன் நேற்று வெளியான நியூ யோர்க் டைம்ஸ் செய்தியொன்றிலேயே, மிச்செல் ஒபாமாவுக்கும், கட்டாரின் முன்னாள் மன்னர் ஹமட் பின் கலிஃபா அல் தனியின் மனைவி ஷெய்கா மொஸாவுக்கிடையே கடந்த 2015ஆம் ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மின்னஞ்சல் தொடர்பாடல்கள் மீதான கண்காணிப்பு முதலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகவல்கள், பாதுகாப்பு விவகாரங்கள், கட்டார் தலைநகர் டோஹாவில் ஷெய்கா மொஸாவின் வருடாந்த கல்வி மாநாட்டில் மிச்செல் ஒபாமா பேசவிருந்ததையடுத்து நிகழ்ச்சிநிரல் மாற்றம் உள்ளிட்ட தொடர்பாடல்கள் இடைமறிக்கப்பட்டுள்ளன.
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago