Editorial / 2020 மார்ச் 15 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவில் ஒரே இரவில் 10 பேர் வைரஸ் தொற்றுநோயால் உயிரிழந்திருந்த நிலையில், ராணி அரண்மனையை விட்டு வெளியேறியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் கொவிட்19 வைரஸானது, கிட்டத்தட்ட 5000 பேரை பலிகொண்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸுக்கு திட்டமிடலின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரைவில் நான்கு மாதங்கள் கடுமையான தனிமையில் இருக்குமாறு அரசாங்கத்தால் அறிவுறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, தொற்றுநோய் மோசமடைந்துவிட்டதால், பிரித்தானியா மகாராணி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோர் அரண்மனையை விட்டு வெளியேறியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
93 வயதான ராணி தனது பாதுகாப்பிற்காகவே இன்று விண்ட்சர் கோட்டைக்கு மாறியிருப்பதாக கூறப்படுகிறது.
2 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Jan 2026