Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 15 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீஜிங்
சீனாவில் கிங்காய் மாகாணத்தின் தலைநகரான ஜினிங்கில் செஞ்சிலுவைச் சங்க ஆஸ்பத்திரியுள்ளது. அந்த ஆஸ்பத்திரிக்கு வெளியில் ஒரு பஸ் நிறுத்தும் நிலையமும் முண்டு. திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு, அந்த பஸ் நிறுத்தும் நிலையத்துக்கு அருகே ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது.
அப்போது சாலையில் திடீரென ஒரு புதைகுழி உருவானது. அதில் அந்த பஸ் விழுந்தது. பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறினர்.
பஸ் மட்டுமின்றி, அந்தப் பகுதியில் நின்றிருந்த பொதுமக்களில் சிலரும்கூட அந்த புதைகுழிக்குள் விழுந்தனர். பஸ் விழுந்ததைத் தொடர்ந்து அந்த புதைகுழிக்குள் ஒரு வெடிப்பும் நிகழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும் இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 16 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
2016ஆம் ஆண்டு இதே போன்று சாலையில் ஏற்பட்ட ஒரு புதைகுழியில் 3 பேர் விழுந்து பலியானதும், அதற்கு முன்பாக 2013ஆம் ஆண்டு, 10 மீற்றர் அகலத்தில் உருவான புதைகுழியில் விழுந்து 5 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago